நாடு திரும்பினார் காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா

புதுடெல்லி:
ருத்துவ பரிசோதனைக்காக, அமெரிக்கா சென்றிருந்த, காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா, இன்று  நாடு திரும்பினார்.

காங்கிரஸ் தற்காலிக தலைவரான சோனியா, மருத்துவ பரிசோதனைக்காக, கடந்த, 12ல், அமெரிக்கா சென்றார். அவருடன், அவருடைய மகனும், கட்சியின் முன்னாள் தலைவருமான, ராகுலும் சென்றிருந்தார். பார்லிமென்ட் கூட்டத் தொடர் தொடங்க இருந்த நிலையில், அவர்கள் அமெரிக்கா சென்றிருந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பே, பரிசோதனைக்காக சோனியா செல்ல வேண்டியிருந்தது. ஆனால், நாட்டில் ‘கொரோனா’ வைரஸ் பரவல் தீவிரமாக இருந்ததால், பயணத்தை ஒத்தி வைத்திருந்தார். இந்நிலையில், மருத்துவ பரிசோதனைகள் முடிந்து, இன்று காலையில், தன் மகன் ராகுலுடன், சோனியா டெல்லி திரும்பினார்.