டெல்லி: காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று காணொளி காட்சி மூலம் நடை பெற்று வருகிறது. இதில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக கடந்த ஒராண்டுக்கும் மேல் பொறுப்பு வகித்துவந்த சோனியா காந்தி, இடைக்கால தலைவர் பதவியி லிருந்து விலகுகிறேன் என  ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

17-வது நாடாளுமன்ற தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, அதற்கு பொறுப்பேற்று,  காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து இளந்தலைவர் ராகுல்காந்தி ராஜினாமா செய்தார். அப்போது, தனக்கு மூத்த தலைவர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என்று குற்றம் சாட்டினார். இதையடுத்து, வேறு தலைவர் நியமிக்கப்படாத நிலையில், மீண்டும் சோனியா காந்தியே இடைக்காலத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.

சமீபத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 23 தலைவர்கள், சோனியா தலைமையை விமர்சித்தும்,  கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் கடிதம் எழுதியிருந்தனர்.

இதனால், அதிர்ச்சி அடைந்த சோனியா, கட்சியின் இடைக்கால தலைவர் பதவியை ராஜினாமா செய்ய விரும்பியதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், இன்று காலை 11 மணி அளவில்  காங்கிரஸ் செயற்குழு கூட்டம் காணொளி கட்சி மூலமாக நடைபெற்று வருகிறது.

இந்த  ஆலோசனையில் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.இந்த கூட்டத்தில் கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்வு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. அப்போது, சோனியாகாந்தி காரிய கமிட்டி உறுப்பினர்களிடம், ளை “கட்சித் தலைவரின் கடமையில் இருந்து விடுவிப்பதற்காக மாற்றுவதற்கான செயல்முறையைத் தொடங்குமாறு வலியுறுத்தியதுடன், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்று கூறி, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக  ராஜினாமா கடிதம் அளித்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஏ.கே.அந்தோனி போன்ற மூத்த தலைவர்கள், கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை சோனியா காந்தி தொடர வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.