சோனியா காந்தி அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார்

டில்லி

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார்.

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார்.

பல மூத்த தலைவர்கள் வற்புறுத்தியும் அவர் தனது முடிவில் இருந்து மாறவில்லை.

அதையடுத்து அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராகச் சோனியா காந்தி பொறுப்பு ஏற்றார்.

சிகிச்சை காரணமாக அவர் அமெரிக்கா சென்றிருந்தார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடருக்கு முன்பாக அவர் அமெரிக்கா சென்றிருந்தார்.

சிகிச்சை முடிந்து இன்று சோனியா காந்தி இந்தியா திரும்பி உள்ளார்.