நாடு திரும்பினார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க வாய்ப்பு

--

டெல்லி: மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாடு சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்தியா திரும்பினார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பாக அவர் அமெரிக்கா சென்றிருந்தார். வெளிநாட்டில் 2 வாரங்கள் தங்கி மருத்துவ பரிசோதனைகளை முடித்து கொண்டு பின்னர் இந்தியா திரும்புவார்.

பின்னர், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்வார் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. சோனியா காந்தியின் வெளிநாட்டு பயணத்தின் போது ராகுல் காந்தியும் உடன் சென்றிருந்தார்.

இந்நிலையில், சிகிச்சை முடிந்து அமெரிக்காவில் இருந்து, சோனியாகாந்தி நாடு திரும்பியுள்ளார். இருவரும நாடு திரும்பி உள்ள நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.