ராகுல் தலைவராக தேர்ந்தெடுக்கும் முன்பே ஓய்வெடுக்க விரும்பிய சோனியா : புதிய தகவல்

டில்லி

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முதல் நாள் சோனியா காந்தி தான் ஓய்வு பெற விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலவராக கடந்த 19 ஆண்டுகளாக சோனியா காந்தி பதவி வகித்து வருகிறார்.   அவருடைய மகன் ராகுல் காந்தி கடந்த 2013 முதல் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராக பதவி வகித்து வருகிறார்.   தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.     குலாம் நபி ஆஸாத் உட்பட பல மூத்த தலைவர்கள் அவருடைய தலைமையை எற்றுக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு ராகுல் காந்தி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பு சோனியா காந்தி பேட்டி ஒன்று அளித்துள்ளார்.   அந்தப் பேட்டியில் ”இனி எனக்குத் தேவை ஓய்வு தான்.   அரசியலில் இருந்து எனக்கு முழு  ஓய்வு தேவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.    ஆனால் அவர் எப்போது ஓய்வு பெறப் போகிறார் என்பதை குறிப்பிடவில்லை.