மகிழ்ச்சியுடன் நீண்ட காலம் வாழ வேண்டும்! மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சோனியாகாந்தி

டில்லி:

பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், பிரதமர் மோடி, மகிழ்ச்சியுடனும்,  நல்ல உடல்நலத்துடனும்  நீண்ட காலம்  ஆரோக்கியமுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்தி உள்ளார்.

இன்று பிரதமர் மோடியின் 69வது பிறந்தநாள் நாடு முழுவதும் பாஜகவினரால்  கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவருக்கு மத்திய அமைச்சர்கள், மாநில பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் உள்ளபல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்,  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், மோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில், பிரதமர் மோடி,  ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்தி உள்ளார்.

பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்றுள்ளார். நேற்று இரவு அவர்  அகமதாபாத்திற்கு வந்தபோது கட்சியினர் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். இன்று அவர் தனது தாயாரிடம் ஆசி பெற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.