டில்லி

ரிபொருள் விலை கடும் உச்சத்தை எட்டி வருவதால் அவற்றை கட்டுப்படுத்தக் கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.   இந்த கடும் விலை உயர்வால் தினசரி வரலாறு காணாத உச்சத்தை  பெட்ரோல் டீசல் விலை தொடுகின்றன.  ஒரு சில மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.  வேறு சில மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ நெருங்கி வருகிறது.

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி இன்று பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.  அந்த கடிதத்தில் அவர், “நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையால் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.  தற்போது இந்தியவில் பணி இழப்பு, ஊதியமின்மை ஆகியவை அதிகரிப்பதால் நடுத்தர மக்கள் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளோர் ஆகியோர் கடும் துயருற்ருள்ளனர்.

எரிபொருட்களின் விலை வரலாறு காணாத மற்றும் தாங்க முடியாத உச்சத்தை எட்டி உள்ளது.  நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் விலை ரூ.100 ஐ தாண்டி உள்ளது. டீசல் விலை உயர்வும் மக்களுக்கு உணவளிக்கும் கோடிக்கணக்கான விவசாயிகளிக்கு துன்பத்தை அளிக்கிறது.  கச்சா எண்ணெய் விலை சென்ற யு பி ஏ ஆட்சிக் காலத்தை விட தற்போது பாதி அளவே உள்ளது.  எனவே கடந்த 12 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துவது லாப நோக்கில் மட்டுமே என எண்ணத் தோன்றுகிறது.

இதுவரை பெட்ரோலுக்கான எக்சைஸ் வரியை 258% மற்றும் டீசலுக்கான எக்சைஸ் வரியை 850% உயர்த்தியதில் மத்திய அரசு கடந்த ஆறு மாதங்களில் ரூ.21 லட்சம் கோடி வருமானம் பெற்றுள்ளது.  எனவே இந்த வருமானத்தினாலான நன்மையை மக்களுக்கு இதுவரை மத்திய அரசு அளிக்கவில்லை.  தவிர சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறைந்தும் எரிபொருள் விலை குறைவதற்கு  பதிலாக அதிகரித்துள்ளது.   உலகெங்கும் கச்சா எண்ணெய் விலை குறையும் போது எரிபொருள் விலை குறைந்து வரும் நிலையில் உங்கள் அரசு அது போல செய்யவில்லை.

டில்லியில் தற்போது மானியமில்லா எரிவாயு விலை ரூ.789 அகி உள்ளது. உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எரிவாயு விலை ரூ.800 ஐ தாண்டி உள்ளது.  கடந்த டிசம்பருக்கு பிறகு இரண்டரை மாதங்களில் சிலிண்டர் விலை ரூ.175 அதிகரிப்பதில் அரசிடம் ஏதும் பதில் உள்ளதா?   பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்கின்ற பொதிலும் நாட்டின் ஜிடிபி மாறுதல் இன்றி காணப்படுகிறது என்பதே உண்மையாகும்.

கடந்த 7 வருடங்களாக ஆட்சியில் இருந்து உங்கள் அரசு இந்த விலை உயர்வுக்கு முந்தைய அரசையே குறை கூறி வருகிறது.  ஆனால் உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2020 ஆம் ஆண்டு கடுமையாக குறைந்துள்ளது.  ஒரு அரசை தேர்வு செய்வது மக்களின் சுமையக் குறைக்கவும் அவர்களுக்கு பிடிக்காத வகையில் பணி புரியக் கூடாது எனபதற்காகவும் மட்டுமே.

எனவே இந்த விலை உயர்வு மூலம் இதுவரை அரசுக்கு கிடைத்த வருமானத்தின் பலனை நமது நாட்டின்நடுத்தர வகுப்பினர், ஊதியம் பெறுவோர்,  விவசாயிகள், ஏழைகள் போன்ற சக குடிமகன்களுக்கு அளிக்க வேண்டும் எஅன் வலியுறுத்துகிறேன்.   ஏற்கனவே வேலை இன்மை, பொருளாதார வீழ்ச்சி, ஊதிய குறைவு, பணி இழப்பு, ஆகியவற்றால் அவதிப்படுவோருக்கு இந்த விலை உயர்வு மேலும் துயரம் அளிக்கும்.,

உங்கள் அரசு இனியாவது சாக்கு போக்குகளை தேடாமல் நல்ல  முடிவுகளை நோக்கி நகரும் என நான் நம்புகிறேன்.  இந்தியா நல்லதையே நாடும்” என எழுதி உள்ளார்