சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதி பயணம் ரத்து!

டில்லி:

.பி. மாநிலத்தில் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற தொகுதியான ரேபரேலி தொகுதிக்கு இன்று பயணம் செய்ய இருந்த சோனியாகாந்தியின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்து. இதை உ.பி. மாநில காங்கிரஸ் தெரிவித்து உள்ளது.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர  நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் 23, 24ந்தேதி ஆகிய 2 நாட்கள்  சுற்றுப்பயணமாக உ.பி. மாநிலத்தில் உள்ள தங்களது தொகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

உத்தரபிரதேசத்தில் உள்ள அவர்களது சொந்த தொகுதிகளான அமேதி மற்றும் ரேபரேலிக்கு சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.  இந்த நிலையில்,  சோனியா காந்தியின் பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  இத்தகவலை உத்தரபிரதேச காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஜிஷான் ஹைதர் உறுதிப்படுத்தினார்.

இருப்பினும், ராகுல் காந்தி திட்டமிட்டபடி, இன்று தனது அமேதி தொகுதிக்கு 2 நாள் பயணமாக செல்கிறார். பல்வேறு கிராமங்களுக்கு சென்று மக்களை சந்திக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி