டில்லி,

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75ம் ஆண்டையொட்டி நாடாளுமன்றத்தில் இன்று  கூட்டுக்கூட்டம் நடைபெறுகிறது.

இன்றைய கூட்டத்தின்போது, வெள்ளையனே வெளியேறு இயக்கம் குறித்து, அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் தங்கள் கருத்தை வெளிப்படுத்திய பின் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, இன்றைய கூட்டுக் கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான சோனியாகாந்தி, ஆளும் பாரதியஜனதா அரசை பெயர் குறிப்பிடாமல் கடுமையாக தாக்கி பேசினார்.

அவர் பேசியதாவது,

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படு கிறது. ஆனால் தற்போது நாட்டை ஆண்டுவரும் கட்சியின் தாய் கட்சியான சில அமைப்புகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை எதிர்த்ததை மறந்துவிட முடியாது என்றும், அத்தகைய அமைப்புக்கள் சுதந்திர போராட்டத்தில் பங்குபெறவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி பேசினார்.

மேலும், 1942ம் ஆண்டில், காந்தியின் சுதந்திர போராட்டத்தை எதிர்த்த வி.டி. சவர்கரைப் பற்றி மறைமுகமாக பெயர் குறிப்பிடாமல் தாக்கி பேசினார்.

மேலும், சுதந்திர போராட்டத்தின் போது காங்கிரஸ் தலைவர்களின் தியாகங்களை  முன்னிலைப்படுத்திய சோனியா, இந்திய சுதந்திர போராட்டத்தின்போது காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான நேரு பல ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்ததையும், பல காங்கிரசார் ஜெயிலிலேயே மரணம் அடைந்ததையும், சுதந்திர போராட்டத்தின்போது காங்கிரசாருக்கு எதிராக  நிறைய அட்டூழியங்கள் நடந்தன, ஆனால் எவரும் தங்கள் போராட்டக்களத்தில் இருந்து பின்வாங்கவில்லை என்பதை நினைவு கூர்ந்தார்.

மேலும் பிரதம மந்திரி நரேந்திர மோடி மற்றும் பி.ஜே.பியினர்,  =உயர்ந்த மதிப்பைக் கொண்டிருந்த சவர்க்கர், ஆகஸ்ட் 1942 ல் காந்தி இந்தியாவை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, சவர்கர்  இந்து மகாசபாவுடன் இருந்தார் என்பதை சுட்டிக்காட்டிய சோனியா,  காந்தியின் சுதந்திர போராட்டத்துக்கு தற்போதைய பிஜேபியின் தாய் அமைப்பை சேர்ந்த சவர்கர் எதிர்ப்பு தெரிவித்தார் என்பதையும் பதிவு செய்தார்.

மேலும், வெள்ளையனே வெளியேறு இயக்கம் துகுறித்து,  சவர்க்கர், “உங்கள் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன” என்ற தலைப்பில் ஒரு கடிதத்தை எழுதினார் என்று பேசிய சோனியாகாந்தி,

அந்த கடிதத்தில் அதில் “மனிதாபிமான உறுப்பினர்கள், உள்ளூர் அமைப்புகள், சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது இராணுவத்தில் பணியாற்றுவோர், அவர்களது பதவிகளைக் கைப்பற்ற வேண்டும்” எந்தவொரு நிலையிலும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சேரக்கூடாது என்று எழுதிய கடித்ததையும் நினைவு கூர்ந்தார்.

அதைத்தொடர்ந்து தற்போதைய நிகழ்வு குறித்து பேசிய சோனியாகாந்தி, பொது துறைகள் குறித்து விவாதம் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது என்பதையும் எடுத்துரைத்தார்.

சோனியாகாந்தியின் பெயர் குறிப்பிடாத இன்றைய பேச்சு பாராளுமன்ற உறுப்பினர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது.