மோடி மாநிலத்தில் சோனியா, ராகுல்,பிரியங்கா நடைப்பயணம்..

--

கமதாபாத்

குஜராத் மாநிலத்தில் சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா நடைப்பயணம் செய்ய உள்ளனர்.

அரசியல் மாற்றங்களுக்கு சில நேரங்களில் நடைப்பயணங்கள் ஒரு கருவியாக அமையும்.

1980களில் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மேற்கொண்ட நடைப்பயணம் ரொம்பவும் பிரசித்தி பெற்றது. கன்னியாகுமரியில் ஆரம்பித்து காஷ்மீரில் முடித்தார்.

ஆந்திராவில் ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டி , மாநிலம் முழுக்க சுற்றி வந்து காங்கிரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினார்.

அவரது மகன் ஒய்.எஸ்.ஆர்.ஜெகன் மோகன், தந்தை பாணியில் பாத யாத்திரை செய்து, சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தினார்.

அது போன்ற நடைப்பயணத்தைப் பிரதமர் மோடியின் குஜராத் மாநிலத்தில் நடத்தக் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

மகாத்மா காந்தி 90 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொண்ட தண்டி யாத்திரை வரலாற்றில் பெரிய பதிவாக இடம் பெற்றுள்ளது.

அதனை நினைவு கூறும் வகையில் காங்கிரஸ் கட்சி காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டி வரை பாதயாத்திரை நடத்த உள்ளது.

வரும் 12 ஆம் தேதி சபர்மதி ஆசிரமத்திலிருந்து தொடங்கி தண்டியில் அடுத்த மாதம் 6 ஆம் தேதி நிறைவு அடைகிறது, இந்த பாதயாத்திரை.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் இந்த யாத்திரையில் பங்கேற்கிறார்கள்.

காங்கிரஸ் ஆளும்  மாநிலங்களின் முதல்- அமைச்சர்கள் உள்ளிட்ட  தலைவர்களும் யாத்திரையில் கலந்து கொள்ள உள்ளனர்.

குஜராத்தில் மாற்றம் வருமா?

பார்க்கலாம்.

– ஏழுமலை வெங்கடேசன்