சோனியாவின் ஆலோசகரும், காங்கிரஸ் மூத்த தலைவருமானா அகமது படேல் காலமானார்…

டெல்லி: மூத்தகாங்கிரஸ் தலைவர்  அகமதுபடேல், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த  நிலையில், சிகிச்சை பலனின்றி   காலமானார்.

குஜராத் மாநிலத்தைச் சோந்தவர் அகமது படேல் (வயது 71). மூத்தகாங்கிரஸ் தலைவரான அவர் தற்போதும் மக்களவை எம்.பி.யாக உளளார். இவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கடந்த அக்டோபர் மாதம் 1ந்தேதி டிவிட்  பதிவிட்டிருந்தார். தொடர்ந்து,  குா்கானில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அந்த நிலையில், இணை நோய்களின் தாக்கம் காரணமாக அவரது உடல்நிலை பின்னடைவைச் சந்தித்தது. இதையடுத்து  அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு  வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.  இந்தநிலையிலி, இன்று அதிகாலை 3.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இத்தகவலை அவரது மகன் ஃபைசல் அகமது சுட்டுரையில் உறுதி செய்துள்ளார்.

மறைந்த அகமது படேல், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகராகவும் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..