போபால்

பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்க நினைக்கும் பெற்றோர் ஆண் குழந்தைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என மோடி அறிவுரை கூறினார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மண்ட்லா மாவட்டத்தை சேர்ந்த ராம் நகரில் நேற்ரு பஞ்சாயத்து ராஜ் மாநாடு நடந்தது.  இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.   இந்த மாநாட்டில் கலந்துக் கொண்ட மோடி சிறப்புரை ஆற்றினார்.

மோடி தனது உரையில், “முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை வழங்கப்படும் என கூறியதற்கு பலத்தை கைதட்டல் கிடைத்தது.   டில்லியில் உள்ள உங்கள் அரசு மக்களின் குரலைக் கேட்டு அதன்படி நடந்து வருகிறது.   உங்கள் விருப்பப்படி இந்ததகைய மிருகத்தனமான செயலுக்கு மரண தண்டனை அளிக்கும் சட்டத்தை கொண்டு வந்து தனது உறுதிப்பாட்டை காட்டி உள்ளது.

பெற்றோர்கள் எப்போதுமே தங்களின் மகளிடம் கவனமாக இருப்பார்கள்.    அதே நேரத்தில் மகன்களையும் கவனமாக கண்காணிக்க வேண்டும்.   மகன்கள் வழி தவறுவதை உடனடியாக கண்காணித்து தடுக்க வேண்டும்.   கெட்ட பழக்கங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

ஒவ்வொரு மகனும் பொறுப்பானவனாக வளர்க்கப்பட வேண்டும்.   மகன்களுக்கு பெண்களை மதிக்க கற்றுத் தர வேண்டும்.   இவ்வாறு செய்வதல் நமது நாட்டில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழல் உருவாகும்.   இதற்காக நாம் ஒரு சமூக இயக்கத்தினை தொடங்கி நடத்த வேண்டும்.

ஒவ்வொரு கிராமத்திலும் கல்வி அறிவு இல்லாத குழந்தையே இல்லை எனும் நிலையை பஞ்சாயத்து பிரதிநிகள் உருவாக்க்க வேண்டும்.   கிராம மக்கலுக்கு மத்திய அரசின் திட்டங்கள் முழுமையாக  போய் சேர உதவ வேண்டும்.   வரும் மே, ஜூன் மாதங்களில் 100 நாள் வேலைத்திட்ட நிதியை நீர் சேமிப்பு பணிகளுக்கு பயன் படுத்தி தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்க வேண்டும்.

ஒரு சில குடும்பங்கள் மட்டுமே சுதந்திர போராட்டத்தில் கலந்துக் கொண்டது போல வரலாறு எழுதப்பட்டுள்ளது.    இது மிகவும் துரதிருஷ்டவசமானது ஆகும்.  கடந்த 1852 ஆம் வருடத்தில் இருந்து இந்திய விடுதலைக்காக பாடுபட்டு அடையாளம் தெரியாமல் உள்ளவர்களை கண்டு கொள்ள வேண்டும்.  இதற்காக மாநிலம் தோறும் அருங்காட்சியகங்கள் உருவாக்கப்பட்டு இளைய தலைமுறைக்கு அவர்களுடைய தியாகங்கள் பற்றி அறிவுறுத்தப்படும்.”  என குறிப்பிட்டார்.