கொரோனா பீதி: பெற்ற தாயை மகன்களே நடுத்தெருவில் விட்ட கொடுமை…

திருச்சி:

திருச்சி அருகே உள்ள துறையூரில் கொரோனா பீதியில் பெற்ற தாயை, கொரோனா பீதி காரணமாக, மகனே வீட்டுக்கு வெளியே  நடுத்தெருவில் போட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் சர்பிட் நகரில் வசித்து வருபவர் குமார் (வயது 42). இவர் டி.வி. சர்வீஸ் செய்யும் தொழில் செய்து வருகிறார். இதேபோன்று இவரது அண்ணன் ராஜா (வயது 45) துறையுரில் உள்ள புதிய குடியிருப்பு வீட்டு வசதி வாரியத்தில் வசித்துவருகிறார்

சாலையில்  கிடக்கும் சரோஜா

இவர்களின் தாயார் சரோஜா (வயது 71)  இவர் கடந்த 11நததேதி அன்று திருமண நிகழ்ச்சிக்கு  ஒன்றுக்கு சென்று வந்ததால், எப்படியோக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவர் திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு  மருந்து மாத்திரைகள் வழங்கி வீட்டிலேயே தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தி திருப்பி அனுப்பி உள்ளனர்.

இந்த நிலையில், திடீரென குமார்  மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியேறிவிட்டார். இதனால் செய்வதறியாது திகைத்த சரோகா, மற்றொரு மகனான ராஜா வீட்டிற்கு சென்று தங்கி விட்ட மீண்டும் குமார் வீட்டுக்கு வந்துள்ளார்.  ஆனால், சரோஜாவிற்கு  தொடர்ந்து,  இருமலும் காய்ச்சலும் ஏற்பட்டதால்,  அன்றிரவு துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார்கள்.

அப்போது அரசு மருத்துவமனையில் கொரான பரிசோதனை தற்போது செய்ய இயலாது. காலை யில் வரும்படி மருத்துவமனையில் அறிவுறுத்தி உள்ளார்கள். இதனால் ராஜா தனது தாயை மீண்டும் தனது தம்பி வீட்டிற்கு செல்லும்படி அவரது வீட்டின் வாசலில் இரவு இறக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால் குமாரும் வீட்டில் இல்லாததால், சரோஜா சாலையிலேயே இரவு முழுவதும் கிடந்துள் ளார். அடுத்த நாள் இதைக்கண்ட அந்த பகுதி பொதுமக்கள்,  அவரை ஆட்டோ மூலம், அவரது மூத்த மகனான ராஜா வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால், இதை முன்கூட்டியே அறிந்த ராஜா,  தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு தனது மாமனார் வீட்டிற்கு திருச்சிக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் ஆட்டோவில் வந்த மூதாட்டியை தெருவில் இறக்கி விடுவதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் ஆட்டோ டிரைவரும் செய்வதறியாது திகைத்த நிலையில்,  சிங்களாந்தபுரம் ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பின்பு ஊராட்சி மன்ற தலைவர், சரோஜாவை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

கொரோனா பீதியில் பெற்ற தாயை 2 மகன்களுமே பாதுகாக்காமல், தெருவில் தவிக்க விட்டது பார்ப்போரை கண் கலங்க செய்தது.

வயதான காலத்தில் தனது மகன்கள் உதவி செய்யாததால் நான் ஆதரவற்று இருக்கிறேன் என்று மூதாட்டி வருத்தத்துடன் தெரிவித்தார்.

இது கொரோனாவின் கோர முகத்தை காட்டுகிறதா அல்லது 10மாதம் சுமந்து பெற்ற தாயை பேணிக்காக்க முடியாத மகன்களின்  கல்நெஞ்சத்தை குறை சொல்வதா என்பது புரியவில்லை.

You may have missed