நடிகர் சோனு சூட்டுக்கு ஐ.நா. சார்பில் ‘சிறந்த மனிதநேயச் செயற்பாட்டாளர்’ விருது…!

நடிகர் சோனு சூட்டுக்கு ஐ.நா. சார்பில் ‘சிறந்த மனிதநேயச் செயற்பாட்டாளர்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை நடிகர் சோனு சூட் இலவசமாக ஏற்பாடு செய்து தந்தார். பேருந்து மட்டுமின்றி, சிலரைத் தனி விமானம் மூலமாகவும் அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்தார்.

வறுமையில் வாடிய விவசாயிக்கு டிராக்டர், ஸ்பெயினில் சிக்கியிருந்த சென்னை மாணவர்கள் வீடு திரும்ப விமான வசதி , பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என பல்வேறு உதவிகளை செய்து வந்தார் .

இதனால் சோனுவுக்கு ‘சிறந்த மனிதநேயச் செயற்பாட்டாளர்’ விருது வழங்கி ஐ.நா. சபை கவுரவித்துள்ளது.