பிரபலங்கள் உதவி செய்ய முன்வாருங்கள் சோனு சூட் அழைப்பு..

கொரோனா தொற்று ஊரடங்கில் சொந்த ஊர் களுக்கு செல்ல முடியாமல் தவித்த ஆயிரக்கணக்கானவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார் சோனு சூட். மாடு வாங்கமுடியாமல் மகள்களை ஏரில் பூட்டி உழுத விவசாயிக்கு டிராக்டர் வாங்கி தந்தார். இதுபோல் தயக்கமில் லாமல் சோனு சூட் உதவி செய்து வருகி றார். அவரிடம் தினமும் நூற்றுக்கணக் கானவர்கள் உதவி கேட்டு டிவிட் செய்த வண்ணம் உள்ளனர். இதையடுத்து பிரபலங்கள் உதவி செய்ய முன்வரும்படி கேட்டிருக்கிறார்.
டிவிட்டரில் அவர் கூறியதாவது:


உதவி தேவைபடுவர்களுக்கு உதவி செய்ய முன்வாருங்கள் என்று தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன். சொகுசு வாழ்க்கை யை விட்டு வெளியில் வந்து, உங்கள் அருகில் உள்ள ஒரு மருத்துவனையிலி ருக்கும் நோயாளியை தத்தெடுத்தோ அல்லது அவர்களது மருத்துவ செலவோ ஏற்று உதவுங்கள். ஓவ்வொருவரும் இதை செய்தால் பாதி சுமை காணாமல்போய்விடும்’ என சோனு சூட் தெரிவித்துள்ளார்.
இந்த டிவிட்டர் மெசேஜுடன் வேக்கப் கால் என்ற ஹேஷ் டேக் உருவாக்கி இருக்கிறார்.