குடியிருப்பை ஓட்டலாக மாற்றிய விவகாரம் : உயர்நீதிமன்றத்தில் சோனு சூட் முறையீடு…

 

இந்தி நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமாக. மும்பையின் ஜுகு பகுதியில் 6 மாடி குடியிருப்பு உள்ளது.

இதனை உரிய அனுமதி பெறாமல், சோனு சூட் ஓட்டலாக மாற்றி விட்டார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிருஹன் மும்பை மாநகராட்சி சார்பில், ஜுகு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சோனு சூட். “வீட்டை ஓட்டலாக மாற்றுவதற்கு மாநகராட்சியிடம் அனுமதி பெற்றுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

குடியிருப்பை ஓட்டலாக மாற்றியதற்கு விளக்கம் கேட்டு ,மாநகராட்சி சோனு சூட்டுக்கு நோட்டீசும் அனுப்பி உள்ளது.

இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் சோனு சூட் முறையிட்டுள்ளார்.

“மாநகரட்சி என் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும். அந்த நோட்டிசை ரத்து செய்ய வேண்டும்” என சோனு சூட், தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களை தனிமை படுத்திக்கொள்ள, இந்த ஓட்டலை சோனு சூட் இலவசமாக அனுமதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

– பா. பாரதி