இந்தியாவில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மே 3-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் ரம்ஜான் நோன்பு நாளைஇன்று முதல் தொடங்கவுள்ள நிலையில் பாலிவுட் நடிகர் சோனு சூட் 25,000 மேற்கு வங்கம், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்திருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தினமும் உணவு வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதற்காக தனது தந்தை சக்தி சாகர் சூட் பெயரில் ‘சக்தி ஆனந்தம்’ என்ற ஒரு அறக்கட்டளை ஒன்றை அவர் தொடங்கியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கரோனா வைரஸ் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தங்குவதற்காக சோனு சூட், தன் ஹோட்டலை இலவசமாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.