பாலிவுட் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சோனு சூட்.

கொரோனா கால கட்டத்தில் நிஜ ஹீரோவானார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது வரை தன்னால் இயன்ற உதவிகளை, நடிகர் சோனு சூட் செய்து வருகிறார்.

புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல பஸ் வசதி செய்து கொடுத்தது, ரஷ்யாவில் சிக்கித் தவித்த தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் தாயகம் திரும்ப விமானம் ஏற்பாடு செய்து தந்தது, விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தது, ஏழை மாணவர்களுக்கு மொபைல் போன் வாங்கி கொடுத்தது, ஒரு கிராமத்தில் மாணவர்களுக்காக மொபைல் டவர் அமைத்துக் கொடுத்தது என இவர் செய்த உதவிகள் ஏராளம்.

கடந்த மாதம் படப்பிடிப்பில் பங்கேற்க ஐதராபாத் வந்தார். அப்போது இரவில் அவர் சாலையில் நடந்து சென்றபோது சாலையோரத்தில் அவரது பெயரில் ஒரு ஃபாஸ்ட் புட் கடை இருந்ததை கண்டு எதிர்பாராதவிதமாக அந்த ஓட்டலுக்கு சென்றார். அவரைக் கண்டு ஆச்சர்யம் அடைந்த ஓட்டல்காரர் வரவேற்றார். கையேந்தி பவனாக இருந்த அந்த ஓட்டலில் என்னென்ன உணவுகள் கிடைக்கும் என்று விசாரித்த படி, தோசைக் கல்லில் சோனு தோசை சுடத் தொடங்கினார். இந்த படங்கள் சமூக வலைதங்களில் வைரலானது.

இந்நிலையில் தற்போது தையல்காரராக மாறிய சோனு சூட், பலரையும் ரசிக்க வைத்துள்ளார். டெய்லரிங் மிஷினில் அமர்ந்து கொண்டு சோனு சூட் துணி தைப்பது போல் இருக்கும் அந்த படமும், வீடியோவும் அமைந்திருக்கிறது. மேலும், இந்த வீடியோவிற்கு கேப்சனாக, ‘சோனு சூட் இலவச தையல் கடை. நான் கால் சட்டையை தான் தைத்துக் கொண்டு இருக்கிறேன். ஆனால், அது அரை கால் சட்டையாகவும் மாறலாம் என்றும், துணிகளின் தையல்களுக்கு கேரண்டி எதுவும் கிடையாது என்று காமெடியாக பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/SonuSood/status/1350334312952942592