வில்லன் நடிகருக்கு ஆரத்தி எடுத்த பெண்கள்.. மவராசன் நல்லாயிருக்கணும்..

கொரோனா தொற்று தடை காலத்தில் நடிகர், நடிகைகள் நிதியுதவி, பொருள் உதவி அளித்தனர். இதனால் ஏழை எளியவர்கள் ஓரளவுக்கு ஆறுதல் அடைந் தனர். ஒரு சில நட்சத்திரங்கள் தங்களது உதவியை குறிப்பிட்ட எல்லை வரை செய்து பின்னர் அமைதியாகிவிட்டனர். ஆனால் ஒரு சில நடிகர்கள் இயலாதவர் களுக்கு தொடர் உதவிகள் செய்து வருகின் றனர்.


தமிழில் ஒஸ்தி, அருந்ததி, தேவி போன்ற படங்கள் மற்றும் பல இந்தி படங்களில் நடித்திருப்பவர் சோனு சூட். பல படங் களில் இவர் பயமுறுத்தும் வில்லனாக நடித்துள்ளார். ஆனால் நிஜத்தில் இவர் மக்கள்முன் ஹீரோவாகியிருக்கிறார். வெளியூர்களிருந்து புலம்பெயர்ந்த வந்த தொழிலாளர்களுக்கு கொரோனா ஊரடங் கால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்பி செல்ல முறைப்படி அரசு அனுமதி பெற்று பஸ், விமானம் மூலம் அவர்களை சொந்த ஊருக்கு மும்பை உள்ளிட்ட இடங்களிலிருந்து அனுப்பி வைக்கிறார்.
சயான்கோலி வாடா பகுதியில் தமிழர்கள் பலர் சொந்த ஊர் திரும்ப சோனு சூட்டிடம் உதவி கேட்டனர். அதையேற்று சுமார் 173 தமிழர்களை விமானம் மூலம் அனுப்பி வைத்தார். அவர்களை வழியனுப்ப வந்தார் சோனு சூட். அவருக்கு நன்றி சொன்னா தொழிலாளர் கள் ஆரத்தி எடுத்து. ’மவராசன் நீ நல்லா இருக்கணும்’ என்று வாழ்த்தினர்.