கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் கொரோனா அச்சுறுத்ததால் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது.

அப்போது பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது சொந்த செலவில்வாகனங்களை ஏற்பாடு செய்து, புலம்பெயர் தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.

அந்த நன்றி கடனாக ஒடிசா தலைநகர் புவனேஸ்வரின் முக்கியசாலை சந்திப்பில் ஒரு குழுவினர் சோனு சூட்டின் பிரம்மாண்ட போஸ்டரை வைத்து வழிபட்டனர். மேலும் அந்த போஸ்டரில், கொரோனா வைரஸை எதிர்த்து போரிடும் மன்னர் என்று புகழாரம் சூட்டப்பட்டது.

நடிகர் சோனு சூட்டின் உதவியால் வீடு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் அவரது புகைப்படத்தை தங்களது பூஜை அறையில் வைத்து வழிபாடு நடத்தியவீடியோக்கள் சமூக வலைதளங்களில் ஏற்கெனவே பரவி வருகின்றன.