விவசாய வேலைகளுக்கு விரைவில் ஓட்டுநர் இல்லாத டிராக்டர் அறிமுகம்
டில்லி
விரைவில் விவசாய வேலைகளுக்காக ஓட்டுனர் இல்லாத டிராக்டர்களை வடிவமைக்கும் பணி முடிவுற உள்ளது.
உலகெங்கும் ஆட்டோமேஷன் எனப்படும் தானியங்கி முறை பல துறைகளில் பரவலாகி வருகிறது. வெளி நாடுகளில் கார்களும் லாரிகளும் ஓட்டுனர் இல்லாமல் தானியங்கி முறையில் ஏற்கனவே புழக்கத்தில் உள்ளன. இந்தியாவில் சோதனை முறையில் இத்தகைய கார்கள் ஓட்டப்பட்டு வெற்றி கண்டுள்ளன. ஆயினும் இம்முறை இன்னும் இந்தியாவில் புழக்கத்துக்கு வரவில்லை.
இதே முறையில் ஓட்டுநர் இல்லாத டிரக்டர் முறைக்கான பரிசோதனை அமெரிக்காவில் நடத்தி வெற்றி அடைந்துள்ளது. இந்த சோதனிஅயை நடத்திய பொறியியல் கல்லூரி பேராசிரியர் சாம் வேன், ”தானியங்கி டிராக்டர் என்பது புழக்கத்தில் உள்ள அதே டிராக்டர் போல உள்ளது. ஆனால் அதன் கட்டுப்பாடு தானியங்கி முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஓட்டுனர் இருக்கை மற்றும் ஸ்டீயரிங் வீல் அகற்றப் படுகிறது.” என தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் புகழ் பெற்ற டிராக்டர்கள் உற்பத்தி நிறுவனங்களான மகிந்திரா மற்றும் எஸ்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களும் இத்தகைய டிராக்ட்ர்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதற்கான மென்பொருள் தயார் நிலையில் உள்ளது. மேலும் ஓட்டுனர் இல்லாத டிராக்டர்களும் சோதனை முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த டிராக்டர் உருவாக்கும் பணிகள் மிக விரைவில் முடிவடையும் என தெரிய வந்துள்ளது. மேலும் ஓட்டுனர் இல்லாத கார்களை விட டிராக்டர்கள் உபயோகம் என்பது அவசியம் என்பதால் இவ்விரு நிறுவனங்களும் முழு மூச்சில் இவைகளை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.