டில்லி

ன்னும் ஒரு சில வாரங்களில் ஆன்லைன் மூலம் உடனடியாக பான்கார்டுகளை வழங்க வருமானவரித்துறை ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

வருமான வரித்துறை அளிக்கப்படும் நிரந்தர கணக்கு எண் அட்டை (PERMANANENT ACCOUNT NUMBER)  சுருக்கமாக பான் கார்ட் என அழைக்கப்படுகிறது.   இந்த பான் எண் மூலம் மட்டுமே வருமான வரிக் கணக்கு உள்ளிட்டவைகள வருமான வரித்துறைக்கு அளிக்க முடியும்.   சமீபத்தில் பணப் பரிவர்த்தனைக்கு ஆதார் அவசியம் இல்லை என உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து மத்திய அரசு பான் எண்ணைக் கட்டாயம் ஆக்கி உள்ளது.

இந்த பான் அட்டையைப் பெற தற்போது வருமான வரித்துறை ஒரு புதிய வழிமுறையை அமைக்க உள்ளது.  பான் எண் வேண்டுவோர் வருமானவரித்துறையிடம் தங்களது ஆதார் விவரங்களை ஆன்லைன் மூலம் அளிக்கவேண்டும்.  இதற்காக அவர்களுக்கு ஒருமுறை உபயோகப்படுத்தக் கூடிய  பாஸ்வர்ட் அளிக்கப்படும்.

அவர்கள் அளிக்கும் விவரமான பெயர், முகவரி, தந்தை பெயர், பிறந்த தேதி உள்ளிட்டவை ஆன்லைன் மூலம் சரி பார்க்கப்படும்.   மேலும் எந்த விவரமும் அளிக்கத் தேவை இல்லை.   அதன் பிறகு பான் எண் ஒதுக்கப்பட்டு மின்னணு பான் கார்ட் ஆன்லைன் மூலம் வழங்கப்படும்.   அத்துடன் அதில் தவறு நடக்காமல் இருக்க கியூஆர் கோடு உடன் இந்த அட்டை இருக்கும்.

இதற்கான சோதனை நடத்தப்பட்டு கடந்த 8 நாட்களில் சுமார் 62000 பான் கார்டுகல் வழங்கப்பட்டுள்ளன.   இன்னும் சில நாட்களில் இந்த முறை முழுவதுமாக அமல் படுத்தப்பட உள்ளது.    இதன் மூலம் புதிய கார்டுகள் மட்டுமின்றி கார்டுகளை தொலைத்தோருக்கு டூப்ளிகேட் கார்ட் வழங்கவும் வழிமுறைகள் செய்யப்பட உள்ளது.