க்வாரா, பஞ்சாப்

தாருடன் விரைவில் ஓட்டுனர் உரிமம் இணைக்கப்படும் என மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பக்வாரா நகரில் இந்திய விஞ்ஞான காங்கிரஸ் அமைப்பின் ஐந்து நாள் கூட்டம் ஒன்று ந்டைபெற்று வருகிறது. இந்த கூட்டம் ”வருங்கால இந்தியா – விஞ்ஞானமும் தொழில் நுட்பமும்” என்னும் தலைப்பில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று விஞ்ஞான செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கலந்துக் கொண்டார்.

அமைச்சர் தனது உரையில், “சட்டத்தில் மற்றொரு மாபெரும் திருப்பம் ஏற்படுத்த உள்ள ஒரு மசோதா பாராளுமன்ற ஒப்புதலுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஆதாருடன் வாகன ஓட்டுனர் உரிமத்தை இணைப்பது சட்டமாக உள்ளது. இதன் மூலம் ஒரே நபர் வேவ்வேறு மாநிலங்களில் ஓட்டுனர் உரிமம் பெறுவது இயலாத காரியமாக உள்ளது.

உதாரணமாக பஞ்சாப் மாநிலத்தில் ஒருவர் குடித்து விட்டு வாகனத்தை செலுத்தி விட்டு அதனால் நான்கு பேர் கொல்லப்பட்டதாக வைத்துக் கொள்வோம். அவர் வேறு மாநிலத்துக்கு தப்பி சென்று வேறு பெயரில் ஓட்டுனர் உரிமம் பெற முடியும் என தற்போது சட்டம் உள்ளது. ஆனால் ஆதார் சட்டபூர்வமாக்கப்பட்டால், அவர் வேறு பெயரைக் கொண்டு விண்ணப்பித்தாலும் அடையாளத்தைக் கொண்டு அவரை கண்டு பிடித்து விட முடியும்” என தெரிவித்துள்ளார்.