விரைவில்…. பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 10ரூபாய் நோட்டு!

டில்லி,

பாதுகாப்பு அம்சங்களுடன் விரைவில் 10ரூபாய் நோட்டு வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. ஆனால், பழைய ரூபாய் நோட்டுக்களும் செல்லும் என்றும் கூறி உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் புதிய 10 ரூபாய் நோட்டுக்களை வெளியிட முடிவு செய்துள்ளது.

இந்த புதிய நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்கள் அதிக அளவில் இடம்பெறும் என்றும், அதன் காரணமாக கள்ளநோட்டு தயாரிக்கப்படுவது தடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

புதிய நோட்டில் மகாத்மா காந்தி படத்துடன், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கையெழுத்தும், இருபுறமும் பேனல்கள் உள்பட, ‘L’  தொடரில் நோட்டுக்களின் வரிசை இருக்கும் என்று கூறியுள்ளது.

மேலும், நோட்டில் பொறிக்கப்படும் எண்கள், இடது இருந்து வலது புறமாக  மற்ற அம்சங்களும், மத்தியில், இரண்டு பேனல்கள் மீது எண்கள் ஏறுவரிசையில் அளவிலும் இருக்கும் என்றும் கூறியுள்ளது.

அச்சிடப்படும் புதிய நோட்டில், 2017 ஆண்டு என்ற குறிப்பு நோட்டின் பின்புறம் இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.