வாஷிங்டன்

மெரிக்க நாடாளுமன்றம் விரைவில் மக்களுக்கு கொரோனா உதவித் தொகை அளிக்கும்  தீர்மானத்தை இயற்ற உள்ளது.

உலக அளவில் அமெரிக்காவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இங்கு இதுவரை சுமார் 1.83 கோடி பேர் பாதிக்கப்பட்டு 3.24 லட்சம் பேர் மரணம் அடைந்துள்ளனர்.  அமெரிக்காவில் பலரும் கொரோனா பாதிப்பால் பணி இழந்துள்ளனர்.   இதையொட்டி இவர்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது.

இதையொட்டி அமெரிக்க செண்ட்டர்கள் சபையில் இது குறித்த விவாதம் நடந்துள்ளது.  இதற்கான நிதி உதவிக்கு அமெரிக்க மத்திய ஃபெடரல் வங்கி $90,000 கோடி நிதியை வழங்க நேற்று இரவு ஒப்புதல் அளிக்கத் தீர்மானம் செய்துள்ளதாகத் தகவல்கள்  தெரிவிக்கின்றன. இந்த ஒப்புதல் உத்தரவு கிடைத்த உடன் உடனடியாக இது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக டெமாக்ரடிக் கட்சியைச் சேர்ந்த மூத்த செனட்டர் சக் ஸ்குமர் தெரிவித்துள்ளார்.

இந்த கொரோனா நிவாரண உதவித் தொகை வாரத்துக்கு நேரடி உதவித் தொகையாக $600 மற்றும் பணியற்றோர் நிவாரணத் தொகையாக $300 என வழங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.   அமெரிக்க அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது.  ஆகவே இது குறித்த வாக்கெடுப்பை உடனடியாக இன்று நடத்த நாடாளுமன்றம் தீர்மானித்துள்ளது.