விரைவில் ரேகை மூலம் வாட்ஸ்அப் இயக்கம்

டில்லி

மூக வலை தளமான வாட்ஸ்அப் ஐ விரல் ரேகை மூலம் இயக்கும் வசதி விரைவில் அறிமுகமாகிறது.

ஆண்டிராய்ட் மொபைல்களை இயங்க வைக்க பின் எண் மற்றும் பேட்டர்ன் உபயோகப்படுத்தப் பட்டது. ஆனால் இதன் மூலம் அவசர காலத்தில் மொபைலை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் ஒரு சில செயலிகளுக்கு மட்டும் இவ்வாறு செய்யும் வசதியை பலரும் பயன்படுத்த தொடங்கினர். குறிப்பாக வாட்ஸ்அப் போன்ற செயலிகளில் இந்த வசதி உபயோகப்படுத்தப்பட்டது.

ஆனால் பல தனிப்பட்ட விவரங்கள் வாட்ஸ்அப் மூலம் பகிரப்படுவதால் இந்த செயலியை மேலும் பாதுகாப்புடன் இயக்க திட்டமிடப்பட்டது. தற்போது மொபைல் தொலிபேசிகளை திறக்க ரேகை அல்லது முக அடையாளம் உபயோகம் பயன்படுத்தப்படுகிறது. அந்த முறையை வாட்ஸ்அப் தளமும் பயன்படுத்த உள்ளது.

இதுகுறித்து வாட்ஸ்அப் தனது அதிகாரபூர்வமான WABetainfo பக்கத்தில், “ஆண்டிராய்ட் 2.19.3 மொபைல்களில் வாட்ஸ்அப். இதில் என்ன புதுமை? இனி இந்த வாட்ஸ்அப் கைரேகை மூலம் திறக்க வசதிகள் விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பல வசதிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன” என பதிந்துள்ளது.

இந்த முறை வந்த பிறகு பயனாளிகள் ஒவ்வொரு முறையும் கைரேகையை பதிந்த பிறகே இச்செயலி திறக்கப்படும். இதன் மூலம் தகவல்கள் திருடப்படும் அபாயம் வெகுவாக குறையும். அத்துடன் வேறு யாரும் மற்றவர் கணக்கில் ஊடுருவ முடியாது.