‘சூரரைப்போற்று ‘ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்….!

இறுதிச் சுற்று’ சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிக்கும் படம் சூரரைப் போற்று . சூர்யாவின் 38வது படமான இந்த படத்தில் நாயகியாக அபர்ணா நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து பல்வேறு விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடந்து வந்தது.

விமான சேவையை நடுத்தர மக்களும் பயன்படுத்தும் வகையில் ஏர் டெக்கான் ஏர்வேஸ் நிறுவனத்தை நிறுவிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கைதான் இப்படத்தின் கதை என ஊர்ஜிதமாக கூறி வந்தனர்.

ஜி.ஆர்.கோபிநாத் கதாபாத்திரத்தில் தான் சூர்யா நடிக்கிறார். இந்த படத்தின் தலைப்பு பாரதியின் கவிதை வரிகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. சூரர் என்றால் சாதித்தவர். சாதித்தவரை போற்றவும் என்பதே இந்த தலைப்பின் அர்த்தம் என பல பல விதமான கருத்துக்கள் எழுந்த வண்ணம் இருந்தது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் இது தவறான தகவல் , இது யாருடைய வாழ்க்கை வரலாறும் அல்ல என்று மறுத்துள்ளார் சூர்யா.

இந்நிலையில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

கார்ட்டூன் கேலரி