இறுதிச் சுற்று’ சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிக்கும் படம் சூரரைப் போற்று.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து பல்வேறு விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடந்து வந்தது.

விமான சேவையை நடுத்தர மக்களும் பயன்படுத்தும் வகையில் ஏர் டெக்கான் ஏர்வேஸ் நிறுவனத்தை நிறுவிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கைதான் இப்படத்தின் கதை என ஊர்ஜிதமாக கூறி வந்தனர்.

ஜி.ஆர்.கோபிநாத் கதாபாத்திரத்தில் தான் சூர்யா நடிக்கிறார். இந்த படத்தின் தலைப்பு பாரதியின் கவிதை வரிகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. சூரர் என்றால் சாதித்தவர். சாதித்தவரை போற்றவும் என்பதே இந்த தலைப்பின் அர்த்தம் என பல பல விதமான கருத்துக்கள் எழுந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் பணியை துவக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் வருகின்ற பொங்கலுக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.