சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தின் ஆகாசம் பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு….!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்பட பலர் நடித்து வரும் ‘சூரரை போற்று’ படம், நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் ஜாக்கியின் கலை இயக்கத்தில் உருவாகி வருகிறது.

சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றது. ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அமேசான் பிரைம் வீடியோ மூலம் இணையம் வழியாக 2020 தீபாவளி அன்று வெளியாகிறது.

தற்போது படத்தின் புதிய பாடலான ஆகாசம் பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. கிரிஸ்டின் ஜாஸ் மற்றும் கோவிந்த் வசந்தா பாடியுள்ள இந்த பாடல் வரிகளை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். இந்த பாடல் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.