சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்பட பலர் நடித்து வரும் ‘சூரரை போற்று’ படம், நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் ஜாக்கியின் கலை இயக்கத்தில் உருவாகி வருகிறது.

சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து பல்வேறு விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடந்து வந்தது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் தீம் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில் ‘இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழாவை விமான நிலையத்தில் வைத்து நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக சென்னை சர்வதேச விமானநிலையத்தில் படக்குழு சிறப்பு அனுமதி பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பும் பெரும்பாலும் விமானத்தில் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.