சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் வெளியாகும் முதல் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. படத்திற்கு U சான்றிதழ் வழங்கியது சென்சார் குழுமம்.
தற்போது இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமம் 55 கோடி ரூபாய்க்கும், கேரளா மற்றும் ஆந்திராவில் இன்னும் விற்பனை துவங்கவில்லை என்றும் செய்திகள் வெளியானது.
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘காட்டுப்பயலே’பாடலின் ஒரு நிமிட வீடியோவை சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியிட்ட படக்குழு இன்று லிரிக் வீடியோவை வெளியிட்டுள்ளது. பாடலாசிரியர் சினேகன் எழுதியுள்ள இந்தப் பாடலை பின்னணி பாடகி தீக்‌ஷிதா வெங்கடேஷன் பாடியுள்ளார்.