வெளியானது சூர்யாவின் ‘சூரரை போற்று’ படத்தின் ‘மண்ணுருண்ட’ பாடல் லிரிக்கல் வீடியோ….!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்பட பலர் நடித்து வரும் ‘சூரரை போற்று’ படம், நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் ஜாக்கியின் கலை இயக்கத்தில் உருவாகி வருகிறது.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

இந்நிலையில் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘மண்ணுருண்ட’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏகாதேசி எழுதியுள்ள இந்தப் பாடலை நாட்டுப்புற பாடகர் செந்தில் கணேஷ் பாடியுள்ளார். மரண ஊர்வலத்தின் போது பாடப்படும் குத்துப் பாடலாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.