சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியானது சூரரை போற்று . சூர்யாவின் 2D என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

GV பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படம் நேரடியாக அமேசான் ப்ரைம் OTT தளத்தில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 12ஆம் தேதி வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது.OTT-யில் மிகப்பெரிய வெற்றியை இந்த படம் பெற்றுள்ளது.

இந்த படத்தின் பின்னணி இசை அடங்கிய வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.