நவம்பர் 12-ம் தேதி வெளியாகிறது சூர்யாவின் ‘சூரரைப் போற்று’….!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், தடையில்லாச் சான்றிதழ் வருவது தாமதமானதால் இப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. சில தினங்களில் படத்துக்கு தடையில்லாச் சான்றிதழ் கிடைத்தது.

இன்று (அக்டோபர் 26) படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லரில் நவம்பர் 12-ம் தேதி ‘சூரரைப் போற்று’ திரைப்படம் வெளியாக இருப்பதை, அமேசான் ப்ரைம் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.