சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்….!

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியானது சூரரை போற்று . சூர்யாவின் 2D என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

GV பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படம் நேரடியாக அமேசான் ப்ரைம் OTT தளத்தில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 12ஆம் தேதி வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது.OTT-யில் மிகப்பெரிய வெற்றியை இந்த படம் பெற்றுள்ளது.

இந்நிலையில் கோல்டன் க்ளோப் எனும் உயரிய விருது விழாவில் சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படம் திரையிடப்பட உள்ளது. இதை 2D என்டர்டெயின்மென்ட்டின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மேற்கத்திய சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் கோல்டன் க்ளோப் முக்கியமான விருதாகப் பார்க்கப்படுகிறது. ஆஸ்கரைப் போல அல்லாமல், கோல்டன் க்ளோப் விருது விழா ஒரு ஹோட்டலில், இரவு நேர விருந்து போலத்தான் ஏற்பாடு செய்யப்படும். ஒவ்வொரு வருடமும் வழக்கமாக விருது வழங்கும் விழாக்களுக்குத் தொடக்கப் புள்ளியாக கோல்டன் க்ளோப் பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து தற்போது கூகுள் தேடலிலும் இந்த படம் இந்திய அளவில் இரண்டாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.