டிகர் சூர்யா நடித்து தயாரித்துள்ள படம் சூரரைப்போற்று. சுதா கொங்கரா இயக்கி உள்ளார். ஹீரோயினாக அபர்ணா பால முரளி நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இப்படம் வரும் அக்டோபர் மாதம் 30 தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியா கிறது.
இப்படத்தில் இடம் பெறும், ‘ காட்டு பயலே..’ பாடல் யு டியூபில் 20 மில்லியன் அதாவது 2 கோடி வியூஸ் பெற்றிருக்கிறது.


முன்னதாக இப்படம் தியேட்டரில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா ஊரடங்கு தளர்வுகள் பெரும் அளவு அறிவிக்கப்பட்டும் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் ஒடிடியில் சூரரைப்போற்று படத்தை வெளியிட்ட சூர்யா அதன் விற்பனை வருமானத்திலிருந்து 5 கோடி ரூபாயை திரையுலக அமைப்புகள் மற்றும்
மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கட்டணம், கொரோனா பாதிப்பிலும் ஈடுபாடாக சேவையில் ஈடுபட்ட சுகாதார பிரிவினர் போன்றவர்களுக்கு பிரித்தளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.