தன் ஹோட்டல் தொழிலாளர்களுக்கு எந்த பிடித்தமும் செய்யாமல், முழு சம்பளத்தையும் கொடுத்து விடுமுறையில் அனுப்பிய சூரி….!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி.

இதனிடையே பிரதமர் மோடி ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்துவிட்டு விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட் அல்லது செல்போன் லைட் ஏதாவது ஒன்றை ஒளிர விடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார் .

பிரதமர் மோடியின் இந்த வேண்டுகோளுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர். ஆனால், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள் யாருமே இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் இதற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சூரி தன் குடும்பத்தினருடன் விளக்கேற்றி ஆதரவு அளித்துள்ளார் .

மேலும் தன்னுடைய ஹோட்டலில் பணிபுரியும் 350 தொழிலாளர்களுக்கும் விடுமுறை கொடுத்து சம்பளத்தில் எந்த பிடித்தமும் செய்யாமல், முழு சம்பளத்தையும் கொடுத்துள்ளார்.

இதேபோல் வறுமையில் வாடும் நாடக நடிகர்-நடிகைகளுக்கு நடிகர் சங்கம் மூலம் ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார் சூரி.