கார்த்திக் ராஜு இயக்கத்தில் நடிகை ரெஜினா நடித்துள்ள படம் சூர்ப்பனகை. இதில் மன்சூர் அலிகான், கிஷோர், அர்ச்சனா கவுடா உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர்.

சாம் சி.எஸ். இப்படத்துக்கு இசையமைக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார்.

இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி நேற்று வெளியிட்டார்.