பாஜவை விமர்சித்த சோபியா கைது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

சென்னை:

பாஜக-விற்கு எதிராக விமானத்தினுள்  தமிழக பாஜக தலைவர் தமிழிசை முன்னிலையில்  கோஷமிட்டு வாக்குவாதம் செய்ததாக தமிழக மாணவி சோபியா கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சோபியாவின் கைதுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வகையில்  சென்னையில் இருந்து தூத்துக்குடி விமானத்தில் பயணித்தார். இந்த விமானத்தில் பயணித்த மாணவி சோபியா  ‘பாசிச பாஜக ஆட்சி ஒழிக’ என கோஷமிட்டார். தொடர்ந்து விமானத்தில் முழக்கமிட்ட படியே வந்துள்ளார்.  இது சலசலப்பை ஏற்படுத்தியது.

சோபியா

இதைத்தொடர்ந்து, விமானம் தூத்துக்குடி வந்து தரையிறங்கியதும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் மாணவி சோபியா  கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படார். இதனையாடுத்து அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அவரின் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சோபியாவிற்கு ஆதரவாக தமிழக அரசியல் தலைவர்கள் குரல் எழுப்பி யுள்ளனர்.

பாஜகவுக்கு எதிராக தமிழிசை முன் முழக்கமிட்டதாக கைது செய்யப்பட்ட பெண்ணை உடனடியாக விடுவிக்க வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது….

ஜனநாயக விரோத – கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்!

அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்?

நானும் சொல்கின்றேன்!

“பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!”

இவ்வாறு பதிவிட்டு உள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன்.  சகோதரி சோபியா கைது, தமிழிசையின் பெருந்தன்மையற்ற செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி