Random image

‘சோபியா’ பின்புலம் விசாரிக்கப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை:

மிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சோபியா வின் பின்புலம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறினார்.

தூத்துக்குடி சென்ற விமானத்தில் பயணம் செய்த  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனை பார்த்து அதே விமானத்தில் பயணம் செய்த சோபியா என்ற இளம்பெண், பாசிச பாஜக ஒழிக என முழக்கமிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சோபியா கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் உள்ளார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், மாணவி சோபியாவின் பின்புலம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், கண்ட கண்ட  இடங்களில் போராட்டம் நடத்துவதை அனுமதிக்க முடியாது என கூறினார்.

அழகிரியின் பேரணி குறித்த கேள்விக்கு, திமுக தங்களுக்கு எப்பொழுதுமே எதிரிக் கட்சிதான் என்றும்.  சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காகவே முதலமைச்சரின் நிகழ்ச்சி நேரம் மாற்றப்பட்டது.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை  வந்துவிடக் கூடாது என்பதற்காகவே முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இதை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மா அவர்களும் அடையாளம் காட்டி விட்டு சென்றார்கள், அதில் எங்களுக்கு எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது/

மேலும், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு 50 சதவீதமாக குறைத்து, விலை உயர்வை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.