வீட்டை சுத்தம் செய்ய அதிநவீன  ரோபாட் வேண்டுமா? விலை ரூ.17000/- மட்டுமே!

 

வீட்டை துல்லியமாக சுத்தம் செய்யும் அதிநவீன ரோபோ வாக்யூம் கிளீனரை சீனாவின் சியாயோமி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ரோபோட்டின் சிறப்பம்சம்,

இதை நீங்கள் ஆன் செய்து வைத்துவிட்டால் மட்டும் போதும். வீட்டில் எந்த நேரத்தில்  எங்கு குப்பை போடப்பட்டாலும் இது தனது லேசர் டிஸ்டன்ஸ் சென்சார்கள் வழியாக அதை மோப்பம் பிடித்து, அந்த இடத்துக்கு போவதற்கான சிறந்த வழியையும் இதுவே மேப்பிங் செய்து தானாக அந்த இடத்துக்குப் போய் அதை சுத்தம் செய்துவிட்டு வந்துவிடும்.

இந்த ரோபாட்டை ரிமோட் வழியாகவும் இயக்க முடியும், மேனுவலாக டைம் ஷெட்யூல் செய்தும் இதை இயக்க முடியும் என்று சியாயோமி நிறுவனம் அறிவித்துள்ளது.

இது செப்டம்பர் 6-ஆம் தேதி முதல் சந்தைக்கு வருகிறது, இதன் விலை RMB 1699 (இந்திய மதிப்பில் ரூ.17000/- ) ஆகும்.

 நன்றி: http://www.moneycontrol.com/news/world-news/xiaomi-unveils-smart-robot-vacuum-cleaner_7382741.html

கார்ட்டூன் கேலரி