அதிமுக அமைப்புச் செயலாளராக சொரத்தூர் ராஜேந்திரன், செ.தாமோதரன் நியமனம்! ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

 சென்னை:

திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர்எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்து உள்ளானர்.

இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அதிமுக அமைப்புச் செயலாளராக சொரத்தூர் ராஜேந்திரன், செ.தாமோதரன் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும், தேர்தல் பிரிவு இணைச் செயலாளராக கோபாலகிருஷ்ணன், எம்ஜிஆர் மன்ற இணைச்செயலராக தாமோதரன் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்,  அதிமுகவில் 2ஆக இருந்த கடலூர் மாவட்டம் கிழக்கு, மத்திய, மேற்கு என 3ஆக பிரிக்கப்பட்டு இருப்பதாகவும்,  கடலூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளராக அமைச்சர் எம்.சி.சம்பத் நியமிக்கப்பட்டு உள்ளார். மேற்கு மாவட்ட செயலாளராக அருண்மொழித்தேவன், கிழக்கு மாவட்ட செயலாளராக கே.ஏ.பாண்டியன் நியமனம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.