உலகின் மிக பழமையான, அழகான மொழியான தமிழை கற்காதது வருத்தம்… மான் கி பாத்தில் மோடி நெகிழ்ச்சி…

டெல்லி: உலகின் மிக பழமையான, அழகான மொழியான தமிழை கற்காதது வருத்தம் அளிக்கறித என மான்கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர்  மோடி நெகிழ்ச்சியுடன் பேசினார்.

மாதந்தோறும் வானொலை மூலம் மான்கிபாத்என்ற பெயரில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அதன்படி பிப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று) (பிப்.28) மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுடன் பிரதமர் உரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது,  சர் சி.வி.ராமன் கண்டுபிடிப்பு அறிவிக்கப் பட்ட இன்றைய நாள் தேசிய அறிவியல் தினம். நமது விஞ்ஞானிகள் குறித்து இளைஞர்கள் நிறைய படிக்க வேண்டும். இளைஞர்களின் மத்தியில் புதுமையின் உணர்ச்சியை காண முடிகிறது.  தற்சார்பு பொருளாதார இலக்குக்கு அறிவியல் மிகப் பெரிய பங்களிப்பு செய்கிறது. அறிவியல் என்பது எல்லை இல்லாதது என்றார்.

மேலும்,  மார்ச் 22-ந் தேதி உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கோடை காலத்துக்காக மழைநீரை சேமிக்க வேண்டும். நீர்நிலைகளை தூய்மைப்படுத்த வேண்டும். நமது கனவுகளை நனவாக்க நாம் பிறரை சார்ந்து இருக்க வேண்டியது இல்லை. இயற்கையை பாதுகாப்பதில் அசாம் மக்கள் முன்னுதாரணமாக உள்ளனர். அசாம் மாநிலத்திலுள்ள காஸிரங்கா பூங்காவில் 112 பறவையினங்கள் கணக்கிடப்பட்டுள்ளன. இதில் 58 பறவையினங்கள் கோடை காலத்தில் வெவ்வேறு நாடுகளிலிருந்து இடம்பெயர்ந்து வருகின்றன. அசாம் மாநிலத்தில் இயற்கையை காப்பதில் கோயில்களுக்கும் முக்கியப் பங்குள்ளது. பருவமழைக்கு முன்பாக நீர் நிலைகளில் தண்ணீரை சேமிக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த 100 நாட்கள் நாம் அனைவரும் தண்ணீரை சேமிப்பதற்கான பணியில் ஈடுபட வேண்டும்.

பல்வேறு கலாசாரங்களையும், பண்பாட்டையும் கொண்டுள்ள மொழிகளை இந்தியா உள்ளடக்கியுள்ளது. ஹரித்வாரில் கும்பமேளா நடைபெற உள்ளது என்றார்.

சில நேரங்களில் ஒரு சின்ன கேள்வி கூட மனதை அசைத்துப்போட்டு விடுகிறது. இந்த கேள்விகள் மிக நீளமானவை அல்ல. மிக எளிமையானவை. ஆனாலும் அவை நம்மை சிந்திக்க வைத்து விடுகின்றன. சில தினங்களுக்கு முன்னால் ஐதராபாத்தை சேர்ந்த அபர்ணா ரெட்டி, “நீங்கள் பல வருடங்களாக பிரதமராக இருந்து வருகிறீர்கள். நிறைய வருடங்கள் முதல்- மந்திரியாக இருந்து இருக்கிறீர்கள். ஏதாவது ஒன்றை தவற விட்டு விட்டதாக உணர்கிறீர்களா?” என கேட்டார்.

அபர்ணாவின் கேள்வி எளியதுதான். அதே போன்று சம அளவில் கடினமானதும்கூட. இதைப்பற்றி நான் யோசித்தேன். என் குறைபாடுகளில் ஒன்று, என்னால் தமிழ் கற்றுக்கொள்ள அதிக முயற்சி எடுக்க முடியவில்லையே என்பதுதான். இதை நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன்.

உலகின் மிகப் பழமையான மொழியான தமிழைக் கற்றுக்கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. உலகம் முழுவதும் தமிழ்மொழி பிரபலமாக இருக்கிறது.  உலகின் தொன்மையான மொழி  அழகான மொழியான தமிழின் இலக்கியத்தரம், தமிழ் கவிதைகளின் ஆழம் பற்றியும் ஏராளமானோர் என்னிடம் புகழ்ந்து கூறியுள்ளனர். இந்தியா பல மொழிகளின் பூமி. இது நமது கலாசாரத்தையும், பெருமையையும் குறிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.