சில நாட்களுக்கு முன்பு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூத்த வங்காள நடிகர் சௌமித்ர சாட்டர்ஜி கவலைக்கிடம்.
85 வயதான இவர் கடந்த சில நாட்களாகவே காய்ச்சலால் அவதிப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.
ஏற்கெனவே அவருக்கு நுரையீரல் அடைப்புப் பிரச்சினை நீண்ட காலமாக இருந்ததால் கொரோனா தொற்று அவரது உடலை இன்னும் பலவீனமாக்கியுள்ளது. கடந்த வருடம் கூட நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.