செவ்வாய் கிரகத்தின் ‘ஒளி ஒலி’ காட்சிகளை பதிவு செய்து அனுப்பிய நாசாவின் இன்சைட்

நாசா:

மெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா செவ்வாய்கிரக ஆய்வுக்கு அனுப்பி உள்ள இன்சைட் விண்கலம் தற்போது அங்குள்ள ஒளி மற்றும் ஒலி காட்சிகளை பதிவு செய்து அனுப்பி உள்ளது. இதை நாசா தெரிவித்து உள்ளது.

செவ்வாய்கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா? அங்கு காற்று, தண்ணீர் வசதிகள் உள்ளதா என்பது குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Sound and Light Captured by Mars InSight Image Credit: NASA

செவ்வாய் குறித்து ஆராய கடந்த மே மாதம் 5ம் தேதி இன்சைட் விண்கலத்தை நாசா விண்ணில் ஏவியது. இந்த  விண்கலம், சுமார் 50 கோடி கிலோ மீட்டர் தொலைவு பயணித்து, செவ்வாய் கிரகத்தை கடந்த நவம்பர் மாதம் 26ந்தேதி செவ்வாய் கிரகத்தில் கால் பதித்தது.

அதைத்தொடர்ந்து  இன்சைட் விண்கலம் முதல் படத்தை அனுப்பி உள்ளது. அந்த படம் தூசி போன்ற மாசு காரணமாக தெளிவற்ற நிலையில் இருந்தது.  ஆனால் அத்துடன் வந்த செய்தி நாசா விஞ்ஞானிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாக கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்து, செவ்வாய் கிரகத்தில் உண்டாகும் அதிர்வுகள் மற்றும் வெப்ப பரிமாற்றங்கள் குறித்து ஆய்வு செய்து வந்தது.

இந்த நிலையில், தற்போது அங்கு உள்ள பகுதிகள் குறித்து புகைப்படங்கள் (ஒளி), அங்கு கேட்கும்  ஒலிகள் (சவுண்டு) போன்றவைகளை பதிவு செய்து அனுப்பி உள்ளது. இதை நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.