மகன் வேத் கிருஷ்ணாவின் பிறந்தநாளை கொண்டாடிய சௌந்தர்யா ரஜினிகாந்த்….!

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் விசாகன் என்பவரை இரண்டாவதாக சென்ற வருடம் திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே வேத் கிருஷ்ணா எனும் குழந்தை உள்ளது அவருக்கு .

இந்நிலையில் இன்று தனது மகன் வேத் கிருஷ்ணாவின் பிறந்தநாள் . அதை வீட்டிலேயே எளிமையாக கொண்டாடி உள்ளனர்.

அதன் புகைப்படத்தை சௌந்தர்யா தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்துடன் “1…2…3…4 என்பதுபோல எங்கள் குழந்தைக்கு 5 வயது ஆகிவிட்டது. உன்னை நாங்கள் தினமும் கொண்டாடுகிறோம். எங்கள் குட்டி ஏஞ்சல் வேத் பாப்பாவை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்” என சௌந்தர்யா ட்விட் செய்துள்ளார்.