விவாகரத்து கேட்டு சௌந்தர்யா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி குடும்பநல முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டு தொழிலதிபர் அஸ்வின் என்பவருக்கும் சொந்தர்யாவிற்கும் திருமணம் நடந்தது. இந்தத் தம்பதியருக்கு வேத் என்கிற மகன் உண்டு.

சௌந்தர்யாவிற்கும் அஸ்வினுக்கும்  கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் சௌந்தர்யா விவகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். இதேபோல் அஸ்வினும் விவகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.

கார்ட்டூன் கேலரி