2வதாக பிரபல நடிகரை மணக்கிறார் செளந்தர்யா ரஜினிகாந்த்!

ரஜினிகாந்தின் 2வது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் வரும் ஜனவரி மாதம் நடைப்பெறும் என்றும், அவர் பிரபல நடிகரை திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

Soundarya

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2வது மகளும், கோச்சடையான், விஐபி 2 படத்தின் இயக்குனருமான செளந்தர்யா ரஜினிகாந்த் கடந்த 2010ம் ஆண்டு அஸ்வின் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ‘தேவ்’ என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக 2017ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்போது பெற்றோருடன் சேர்ந்து வாழும் செளந்தர்யாவுக்கு மறுமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

செளந்தர்யாவுக்கு ‘வஞ்சகர் உலகம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவரும், மருந்து நிறுவனத்தை நடத்தி வருபவருமான விசாகன் என்பவர் மாப்பிள்ளை என கூறப்பட்டுள்ளது. இரு வீட்டாரின் சம்மதத்துடன் இந்த திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சௌந்தர்யா ரஜினி காந்தின் திருமணம் ஜனவரி மாதம் நடைப்பெற உள்ளதாக கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-