ஹீத்ரு விமான நிலையத்தின் பொறுப்பற்ற பதில் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது : சவுந்தர்யா ரஜினிகாந்த்

லண்டன் சென்ற சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அவர் கணவர் விஷாகனின் பாஸ்போர்ட் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் திருட்டு போனது .இது குறித்து அவர்கள் விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் . லண்டனில் உள்ள இந்திய தூதராக அதிகாரிகள் அவர்களுக்கு தற்காலிக பாஸ்போர்ட் வழங்கியுள்ளனர் .

இது குறித்து சவுந்தர்யா தனது ட்விட்டரில் , கடந்த 1-ந்தேதி ஹீத்ரு விமான நிலையத்தில் எங்களுடைய கைப்பையை திருடி விட்டனர். இதுகுறித்து உடனடியாக புகார் செய்தோம். திருட்டு நடந்தபோது அங்குள்ள கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை என்று தெரிவித்தனர்.

இந்த பொறுப்பற்ற பதில் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளுக்கும் அவர்களின் உடமைகளுக்கும் என்ன பாதுகாப்பு இருக்கிறது? என் கணவரின் பாஸ்போர்ட் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை இழந்து விட்டோம். இதுபோன்ற மோசமான சம்பவம் எங்களுக்கும், வேறு யாருக்குமே நடந்து இருக்க கூடாது என்று பதிவிட்டுள்ளார் .