வங்கப்புலி….தாதா….என்று அழைக்கப்படும் சவுரவ் கங்குலியின் பிறந்தநாள் இன்று

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் என்றால் அனைவரும் முதலில் கூறுவது கூல் கேப்டன், நம்ம தல என்று வர்ணிக்கப்படும் மகேந்திரசிங் தோனியின் பெயரை தான். தோனியின் பிறந்த நாள் நேற்று அவரது இல்லத்தில் கொண்டாடப்பட்டது. இதில் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சக வீரர்கள் பங்கேற்று தோனிக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல் ஒரு காலத்தில் இவரது பெயரும் கிரிக்கெட் ரசிகர்களை கட்டிப்போட்டது. இந்திய கேப்டன்களில் மறக்க முடியாத ஒருவராக இருந்த சவுரவ் கங்குலியின் 47வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
ganguly
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத வீரராக இன்னும் உள்ளார். அவரது பிறந்த நாளை கொண்டாடி வரும் வேலையில் சமூக வளைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் வீரேந்திர சேவாக் தனக்கே உரிதான முறையில் வரிசைப்படுத்தி கங்குலியை வர்ணித்து வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்து செய்தியில்,

1: எழுந்திருப்பார், இருமுறை கண்ணை மூடி திறப்பார், நடனம் போன்ற அசைவை வெளிப்படுத்துவார்
2: பவுலர்கள் வீசும் பந்துக்களை துவம்சம் செய்வார், அவை சில நேரம் பார்வையாளர்களையும் பதம் பார்க்கும்
3: அவர் வீசும் பந்து மட்டும் ஸ்விங் ஆகாமல் இருக்கும், அவரின் தலை முடியும் தான்
4: இவர் தனிப்பட்ட முறையில் கொண்டாடுவதை யாரும் பார்த்திருக்க முடியாது

இவர் மிகச்சிறந்த மனிதர்

இவ்வாறு சவுரவ் கங்குலியை வர்ணித்து வீரேந்திர சேவாக் வாழ்த்து தெரிவித்துள்ளார்

கங்குலியில் நினைவுகளை நாமும் வரிசைப்படுத்துவோம்:

1. கங்குலி என்றவுடன் கண்முன்னே வருவது ஆக்ரோஷம். இந்த ஆக்ரோஷம் தான் கங்குலியை மற்ற இந்திய கேப்டன்கள் மத்தியில் இருந்து தனித்துக் காட்டியது. இந்தியா இன்று கிரிக்கெட்டில் ஜாம்பவானாக வலம் வருவதற்கு கங்குலியின் ஆக்ரோஷம் தான் ஆரம்பப் புள்ளியாக இருந்தது என்றால் மிகையாகாது…

2. கிரிக்கெட்டின் கடவுள், மாஸ்டர் பிளாஸ்டர் என்று வர்ணிக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். அந்த கடவுளின் அரியணைக்கு சவால் விட்ட ஒரே வீரர் சவுரவ் கங்குலி. 90களின் முடிவில் சச்சின் என்ற சகாப்தத்திற்கு கிட்டத்தட்ட மூடுவிழா நடத்தியவரும் இவரே…

3. முதன் முறையாக 1992ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற கங்குலி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் 3 ரன்களை மட்டுமே எடுத்தார். இதனால் கங்குலி ஆட்டத்தில் திருப்தி அடையாத கிரிக்கெட் நிர்வாகம் அவரை அணியில் இருந்து நீக்கியது. 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் கங்குலி இடம்பெற்றார்…

4. 1996ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற கங்குலி வெறித்தனமாக விளையாடி அந்நிய மண்ணில் சதம் அடித்து அசத்தினார். இந்த சதம் கிரிக்கெட் வாரியத்திற்கு பதிலடியாக அமைந்தது…

5. பந்தை சிக்சர்களுக்கு விளாசினால் விக்கெட் பறிப்போய்விடும் என்று வீரர்கள் அஞ்சிய நிலையில், பந்தை பலமுறை மைதானத்திற்கு வெளியே அடித்து கங்குலி அசத்தினார். இவரின் அதிரடி ஆட்டங்கள் சச்சினையும் மிஞ்சும் படியக இருந்தன. இதனால் இருவரில் யார் சிறந்த வீரர் என்ற விவாதங்களும் நடத்தப்பட்டன…
souvrav
6. ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்களில் சச்சினை வீழ்த்தி விட்டால் இந்தியா தோல்வி அடையும் என்று எதிரணியினர் கருதிய போது, மற்றொரு வீரர் எழுச்சி பெற்றார். அவர்தான் பெங்கால் டைகர் என்று அழைக்கப்படும் கங்குலி. இந்திய அணியில் கங்குலியை வீழ்த்தவும் எதிரணியினர் திட்டமிட தொடங்கினர்…

7. இவரின் இந்த வளர்ச்சிக்கு கிடைத்த பரிசுதான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் என்ற பொறுப்பு…….

8. ஒரு காலத்தில் ஆஸ்திரேலியா அணியை வெற்றிக்கொள்ள யாருமே இல்லை என்ற நிலை மாறவும், அவர்களையும் வீழ்த்தி ரசிகர்களுக்கு மறக்க முடியாத தருணங்களை அளித்தனவர் கங்குலி தான்…

9. தற்போது மகேந்திர சிங் தோனி, விராட் கோலி தலைமையில் விளையாடி வரும் இந்திய அணி சிறந்து விளங்குவதற்கு முன்னாள் கேப்டனாக இருந்த கங்குலியின் கட்டமைப்பு தான் என்ற கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்…

10. வங்கப்புலி, தாதா என்று செல்லமான அழைக்கப்படும் கங்குலியின் சாதனைகளை நினைவு கூறுவதன் மூலம் நாமும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்போம்…